சூரரை போற்று படத்தின் சூப்பர் அப்டேட் இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ’சூரரைப்போற்று’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் அந்த செய்தி வெளியாகி உள்ளது.
’சூரரைப்போற்று’ படத்தின் டீசர் வரும் 7-ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டு அதில் ‘பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி’ என்று குறிப்பிட்டுள்ளார் இதற்கு என்ன அர்த்தம் என்பது டீசர் வெளியான பின்னர் தான் தெரியவரும்.
சுதா கொங்காரா இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி ... teaser from Jan 7th ... #GV70 @Suriya_offl #sudhakongra pic.twitter.com/OQ9FK0leyE
— G.V.Prakash Kumar (@gvprakash) January 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments