சூரரை போற்று படக்குழுவினர்களின் சூப்பர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 01 2020]

நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வந்த ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்றைய புத்தாண்டு தினத்தில் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘சூரரைப்போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளிவந்து சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம்லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சூர்யாவின் ரசிகர்களுக்கு ஆன புத்தாண்டு பரிசாக கருதப்படுகிறது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.