'தலைவர் 168' படத்துடன் கனெக்சன் ஆனது 'சூரரை போற்று'

  • IndiaGlitz, [Saturday,February 22 2020]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய ’சூரரைப்போற்று’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தை புரமோஷன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் பாடல் விமானத்தில் நடுவானில் மாணவர்கள் மத்தியில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சன் டிவி நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 168’ படத்தை தயாரித்து வரும் சன் நெட்வொர்க், விஜய்யின் ‘தளபதி 65’ படத்தையும் தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது சூர்யாவின் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

More News

இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் - விக்கிபீடியா நடத்திய போட்டி

கூகுளில் எதைத் தேடினாலும் முதலில் வந்து நிற்பது விக்கிபீடியா தரவுகள் தான். அந்த அளவிற்கு தற்போது விக்கிபீடியா  தரவுகளின் ராஜாவாக உலகம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது.

தூத்துகுடி விவகாரம்: ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரஜினிகாந்த் கூறியதாக கூறப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும்

பணமோ, வார்த்தைகளோ இதை ஈடுசெய்துவிட முடியாது: சிம்புவின் பரபரப்பு அறிக்கை

சமீபத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவம் திரையுலகினர்களையே அதிர்ச்சி அடைய செய்

'துப்பறிவாளன் 2' படத்தில் இருந்து விலகிவிட்டாரா மிஷ்கின்? பரபரப்பு தகவல்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது

நடிகை ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்த ரசிகர்: வைரலாகும் வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு தப்பி ஓடிய இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது