சூரரை போற்று' அடுத்த அப்டேட்டை தந்த ஜிவி பிரகாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் இந்த ஒரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மாறாதீம்’ என்ற பாடல் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் அடுத்த சிங்கிள் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ’வெய்யோன் சில்லி’ என்று ஆரம்பிக்க இருப்பதாகவும் இந்த பாடலை விவேக் எழுத, ஹரி சிவராம கிருஷ்ணன் என்பவர் பாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பாடலின் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் இந்த பாடலை கேட்க அனைவரும் தயாராக இருங்கள் என்றும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார் இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
The next single from #SooraraiPottru is #veyyonsilli #வெய்யோன்சில்லி sung by #harishsivaramakrishnan written by @Lyricist_Vivek ... @Suriya_offl #SudhaKongara @2D_ENTPVTLTD ... date and time will be announced by @2D_ENTPVTLTD @SonyMusicSouth .. excited ??
— G.V.Prakash Kumar (@gvprakash) January 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments