சூரரை போற்று குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

  • IndiaGlitz, [Friday,April 24 2020]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சூர்யா பாடிய ’மாறாதீம்’ என்ற பாடல் மற்றும் விமானத்தில் வெளியான ’வெய்யோன் சில்லி’ ஆகிய பாடல் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் பாடல் குறித்த தகவல் மற்றும் அந்த பாடலை பாடியவர்கள் குறித்த விபரங்களை இன்று இரவு 8 மணிக்கு அறிவிக்கவிருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று இரவு 8 மணிக்கு மேல் சூர்யாவின் ரசிகர்கள் இந்த பாடலை டிரெண்டுக்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

More News

கொரோனா சிகிச்சை: சிகாகோவில் வெற்றிபெற்ற Remdesivir மருந்து சீனாவில் படுதோல்வி!!! நடந்தது என்ன???

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றதாகச் செய்தி வெளியிட்டது.

காற்று மாசுபாட்டினால் கொரோனா உயிரிழப்பு அதிகமாகிறதா??? உண்மை நிலவரம் என்ன???

கொரோனா நோய் பரவுவது குறித்தும் பாதிப்பு ஏற்படுவது குறித்தும் உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன

சென்னை, கோவை, மதுரையில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி

சென்னை, கோவை, மதுரை ஆகீய மாநகராட்சிகளில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரையிலும், திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு

உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? கமல்ஹாசன் ஆவேசம்

கோவையில் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக் கூறி ஆன்லைன் பத்திரிகை நிறுவனர் மற்றும் அவரது பத்திரிகையில் பணிபுரியும் இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி

பூமித்தாய்க்காக ஒரு பாடல்: உலக இசை மேதைகளுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

நேற்று அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கம்போஸ் செய்த 'ஹேண்ட்ஸ் அரெளண்ட் த வேர்ல்ட்