சூரரைப் போற்று ஒளிப்பதிவாளரை திருமணம் செய்த பிரபல நடிகை: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,August 24 2022]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'சூரரைப்போற்று’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷின் இசையில் உருவான திரைப்படம் ’சூரரைப்போற்று’. இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் அது மட்டுமின்றி சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் சிறந்த படம் என ஐந்து தேசிய விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘சூரரை போற்று’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிகேத் பொம்மி ரெட்டி தனது நீண்டநாள் தோழியும் நடிகையுமான மெர்ஸி ஜான் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்களை நிகேத் பொம்மி ரெட்டி மற்றும் மெர்ஸி ஜான் ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மெர்ஸி ஜான் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அமேசான் பிரைம் வீடியோவுகாக ஒரு தொடரில் நடித்து உள்ளார் என்பதும், மேலும் இவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.