close
Choose your channels

புதிய சாதனை படைத்த சூர்யா-வின் சூரரைப் போற்று....! அள்ளிக்குவிந்த விருதுகள்.....!

Friday, August 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை, அவரது புத்தகத்தை தழுவியே எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யா தத்ரூபமாக நடித்து, கோபிநாத்-ஆகவே வாழ்ந்திருப்பார். மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியும் தன்னுடைய இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இத்திரைப்படம் கன்னடம், மலையாளம், தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளிலும், டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இப்படத்திற்கு "சிறந்த திரைப்படத்திற்கான விருது"ம், இதில் நாயகனாக நடித்த சூர்யாவிற்கு  "சிறந்த நடிகருக்கான விருது"ம் கிடைத்துள்ளது. திரை விமர்சகர்கள் பலரும் இந்த செய்தியை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎம்டிபி ( IMDB) என்ற ரேடிங் தளம், உலக அளவில் தலைசிறந்த படங்கள் எது என ரசிகர்களிடம் கருத்துக் கேட்டு பட்டியலை வெளியிட்டு இருந்தது.  இதில் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று, சூரரைப் போற்று திரைப்படம் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Soorarai Potru awarded best actor and best film awards at the Indian film festival of Melbourne ??

— Capt GR Gopinath (@CaptGopinath) August 20, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment