புதிய சாதனை படைத்த சூர்யா-வின் சூரரைப் போற்று....! அள்ளிக்குவிந்த விருதுகள்.....!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை, அவரது புத்தகத்தை தழுவியே எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யா தத்ரூபமாக நடித்து, கோபிநாத்-ஆகவே வாழ்ந்திருப்பார். மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியும் தன்னுடைய இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இத்திரைப்படம் கன்னடம், மலையாளம், தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளிலும், டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதும், இதில் நாயகனாக நடித்த சூர்யாவிற்கு  சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. திரை விமர்சகர்கள் பலரும் இந்த செய்தியை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎம்டிபி ( IMDB) என்ற ரேடிங் தளம், உலக அளவில் தலைசிறந்த படங்கள் எது என ரசிகர்களிடம் கருத்துக் கேட்டு பட்டியலை வெளியிட்டு இருந்தது.  இதில் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று, சூரரைப் போற்று திரைப்படம் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Soorarai Potru awarded best actor and best film awards at the Indian film festival of Melbourne ??

— Capt GR Gopinath (@CaptGopinath) August 20, 2021

More News

துணி மாஸ்க்கை யூஸ் பண்றீங்களா… கவனிக்க வேண்டிய சில முக்கியமான டிபஸ்!

கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது ஆந்தாலஜி படம் இல்லை....! படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....!

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தான், கசடதபற’. இப்படத்தை பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ளார்

சமந்தாவுக்கு கிடைத்த சூப்பர் விருது: திரையுலகினர் வாழ்த்து!

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விழாவில் பல தமிழ் திரைப்படங்கள் கலந்து கொண்டன என்பது தெரிந்ததே. குறிப்பாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யா சிறந்த

பூஜா ஹெக்டே பகிர்ந்த 'பீஸ்ட்' படப்பிடிப்பு புகைப்படம்: இணையத்தில் வைரல்

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்புக்காக தயாராகும் புகைப்படம் ஒன்றை இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே

கணவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற சூப்பர் ஸ்டார் மகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுப்பிரமணியன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.