தடுப்பூசி போட்டு கொண்ட ஒருசில நாட்களில் கொரோனா பாதிப்பு: 'சூரரை போற்று' பட நடிகர் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரனோ பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்
சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார் நடிகர் பரேஷ் ராவல், பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் மார்ச் 9ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டதாக தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்டும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நடிகர் பரேஷ் ராவல் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
V for vaccines. ! Thanks to All the Doctors and Nurses and the front line Health care workers and The Scientists. ??Thanks @narendramodi pic.twitter.com/UC9BSWz0XF
— Paresh Rawal (@SirPareshRawal) March 9, 2021
Unfortunately, I have tested positive for COVID-19. All those that have come in contact with me in the last 10 days are requested to please get themselves tested.
— Paresh Rawal (@SirPareshRawal) March 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments