சாப்ட்வேர் வேலை பறிபோய் காய்கறி விற்ற இளம்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்!

இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல ஏழை எளிய மக்களுக்கு திரையில் வில்லனாகவும் நிஜத்தில் ஹீரோவகவும் இருந்து வரும் நடிகர் சோனுசூட் உதவி செய்து வருகிறார் என்ற செய்தியை பார்த்து வருகிறோம். தினந்தோறும் சோனு சூட் செய்த உதவி குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சாப்ட்வேர் எஞ்சினியர் வேலை பறிபோய் காய்கறி விற்ற இளம்பெண்ணுக்கு பணி ஆணை வழங்கி சோனு சூட் செய்த உதவி குறித்த தகவல் வெளிவந்துள்ளது

ஐதராபாத்தை சேர்ந்த சாரதா என்ற இளம்பெண் டெல்லியில் உள்ள பன்னாட்டு நிறுவனமொன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். அவர் வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாரதா உள்பட பலர் அந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர் 

இதனை அடுத்து சொந்த ஊர் வந்த சாரதா வேலை பறி போனது குறித்து எந்தவித கவலையுமின்றி காய்கறி வியாபாரத்தில் இறங்கினார். அதிகாலை 4 மணிக்கே மொத்த காய்கறி மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்து தனது ஊரில் விற்பனை செய்தார். இதுகுறித்து அவர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் கூறியபோது, ‘எனக்கு வேலை பறி போய் விட்டதால் எந்த கவலையும் இல்லை. காய்கறி வியாபாரம் செய்வதால் எந்த வருத்தமும் இல்லை. இது எனக்கும் எனது குடும்பத்தாரையும் காப்பாற்றும் வருமானமாக தான் நான் கருதுகிறேன். இதில் எந்த கெளரவ குறைச்சலும் இல்லை.  மீண்டும் சாப்ட்வேர் வேலை கிடைத்தால் நான் வேலைக்கு செல்வேன்’ என்று கூறியிருந்தார் 

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட் வழக்கம்போல் தனது உதவியாளரை அனுப்பி அந்த பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’என்னுடைய உதவியாளர் சாரதாவை சந்தித்து அவரிடம் விசாரித்து பணி ஆணையை வழங்கி உள்ளார்’ என ட்வீட் செய்துள்ளார். இதனை அடுத்து வழக்கம்போல் சோறு சூடாக அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

சமீபத்தில் நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க்கூட பணம் இல்லாமல் இருந்த விவசாயி ஒருவர், தனது இரண்டு மகள்களை வைத்து உழுது வீடியோ வைரல் ஆனதை அடுத்து அந்த விவசாயி வீட்டிற்கு டிராக்டரை கொண்டு வந்து நிறுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட், அதேபோல் தற்போது சாப்ட்வேர் வேலை பறிபோய் காய்கறி விற்று இளம்பெண்ணுக்கு பணி ஆணை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'நண்பன்' பட பாணியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பிரசவம்: கிராம மக்கள் அசத்தல்

தளபதி விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தின் பாணியில் வாட்ஸ்அப் வீடியோ மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம்

வனிதா மீது புதிய வழக்குப்பதிவு: பெரும் பரபரப்பு

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் இந்தத் திருமணத்தை கடுமையாக விமர்சனம் செய்த நடிகைகள் கஸ்தூரி,

ஊரடங்கு முடியும் நிலையிலும் குறையாத கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு நிலவரம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தினமும் சுமார் 7000ஆக இருந்து வரும் நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு 7000க்கு அருகில் உள்ளது.

அடிச்சு பழுக்க விடாதேம்மா: ரசிகரின் கமெண்ட்டுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா

சன்டிவியில் 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான அர்ச்சனா, அதன்பின் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர்!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது மகள் சவுந்தர்யா குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் சென்றார் என்றும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது