பொண்ணுங்களோட கற்பனையில மட்டும் தான் நிம்மதியா வாழமுடியும்: 'சூது கவ்வும் 2' டீசர்..!

  • IndiaGlitz, [Saturday,March 23 2024]

விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் வெறும் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 35 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, அசோக்செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவான இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்த படத்தை எஸ்ஜே அர்ஜுன் இயக்கியுள்ள நிலையில் முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த இரண்டாம் பாகத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரில் இறுதியில் ’பொண்ணுங்களோட கற்பனையில் மட்டும் தான் நிம்மதியாக வாழ முடியும், கல்யாணம் பண்ணிக்கிட்டா நிம்மதி போய்டும்’ என்று சிவா சொல்வதுடன் முடிவடைந்துள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து நிலையில் டிரைலர் மற்றும் பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அதுமட்டுமின்றி விரைவில் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரியங்கா நல்காரி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

ரோஜா சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி சமீபத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மதுமிளா நீண்ட காலம் சினிமா துறையில் இருந்து விலகி இருக்க காரணம் இதுதானா ?

சுதந்திரம் என்பது தான் ஒரு பெண்ணிற்கு அதிக அளவில் சந்தோசத்தை தருகிறது.நான் சந்தோஷமாக இருந்தால் தான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அதே இன்பத்தை என்னால் பிரதிபலிக்க முடியும்......

பாஜக கூட்டணி கட்சிகள் பாமக, தமாக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்..!

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்  இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளான பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடது கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நிலையில் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள

பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் முழு விபரங்கள்..!

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியை அடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமைத்துள்ளதூ. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்கள் இதோ.