close
Choose your channels

'சூது கவ்வும்' இரண்டாம் பாகத்தில் இந்த பிரபல நடிகரா? விரைவில் அறிவிப்பு..!

Monday, April 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் ’சூது கவ்வும்’ என்ற திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ’சூது கவ்வும்’. திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சிவி குமார் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் 2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.35 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் சிவி குமார் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ’சூது கவ்வும் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதாகவும் படத்தில் அவரது கேரக்டரை டெவலப் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் நலன் குமாரசாமி அடுத்ததாக கார்த்தி நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும், சமீபத்தில் இந்த படம் குறித்த தகவல்கள் வெளியானது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment