'சூது கவ்வும் 2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விஜய் சேதுபதி இல்லையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ’சூது கவ்வும்’. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிவி குமார் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் 2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.35 கோடி வரை வசூல் செய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அதில் விஜய் சேதுபதியின் நடிப்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
’சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’சூது கவ்வும் 2’ என்ற டைட்டிலுக்கு கீழே ’நாடும் நாட்டு மக்களும்’ என்ற சப் டைட்டில் உடன் வெளியாகி இருக்கும் இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
’சூது கவ்வும்’ முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கிய நிலையில் ‘சூது கவ்வும் 2’ படத்தை எஸ்.ஜே அர்ஜுன் என்பவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த சிவி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’சூது கவ்வும்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதை எடுத்து இந்த படம் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
It’s happening…🍀 The Gang 😈 is Coming Again With New Rules ! Gladly Presenting You all .#Soodhukavvum2:Nadum Naatu Makkalum@icvkumar #SJarjun @actorshiva #Karunakaran @ThirukumaranEnt @dopkthillai @ignatiousaswin #Edwinlouis @onlynikil @digitallynow pic.twitter.com/axWhDB74dV
— C V Kumar (@icvkumar) April 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments