அஜித்துடன் ஆறாவது முறையாக இணைந்த பிரபல நிறுவனம்

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் இசை வெளீயீட்டு விழா குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை உரிமையை பிரபல இசை நிறுவனம் சோனி மியூசிக் சவுத் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை சோனி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனம் தொடர்ந்து ஆறாவது முறையாக அஜித் நடிக்கும் படங்களின் இசை உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 'மங்காத்தா', 'பில்லா 2', 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்', 'வேதாளம்', 'ஆகிய படங்களின் இசை உரிமையையும் இதே நிறுவனம் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஸ்வரூபம் 2' பட டிரைலர் வெளியாகிவிட்டதா? கமல் விளக்கம்

உலகநாயகன் கமல்ஹாசனின் வெற்றி படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டதாக கமல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்...

ஆர்.ஜே.பாலாஜியை திட்டியது ஏன்? இயக்குனர் கண்ணன்

'ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை', சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் ரீமேக் குறித்து மனம் திறந்த கெளதம் கார்த்திக்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், பிரபு நடித்த வெற்றிப்படம் 'அக்னி நட்சத்திரம்'.

ஹிப்ஹாப் தமிழாவுக்கு இன்னும் 17 நாள் தான் அவகாசம் இருக்கு!

விஷால் நடித்த 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.

மூன்று புதிய மாடல்களுடன் மீண்டும் கலக்க வருகிறது நோக்கியா

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மொபைல்போன் அறிமுகமானபோது அனைவருக்கும் தெரிந்த ஒரே மாடல் நோக்கியா தான். ஆனால் காலப்ப்போக்கில் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டி காரணமாகவும், ஆண்ட்ராய்ட் போனின் வருகை காரணமாகவும் நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக மொபைல் போன் சந்தையில் இருந்து ஒதுங்கி இருந்தது.