90s கிட்ஸ்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
90s கிட்ஸ்கள் மிகவும் விரும்பிப் பார்த்த தொலைக்காட்சி தொடர் ஒன்றை திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக சோனி பிக்சர்ஸ் அறிவித்துள்ளதை அடுத்து 90s கிட்ஸ்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு டிடி தொலைக்காட்சியில் சூப்பர் ஹீரோ தொடராக வெளிவந்த ’சக்திமான்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக 450 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்த தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 20 வருடங்களுக்குப்பின் இந்த தொடரை திரைப்படமாக தயாரிக்க சோனி பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது .இந்த நிறுவனம் ’சக்திமான்’ தொடரில் சூப்பர் ஹீரோவாக நடித்த முகேஷ் கண்ணாவின் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
இந்த படத்தின் ’சக்திமான்’ கேரக்டரில் நடிக்கும் நடிகர் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக இருப்பதால் 90s கிட்ஸ்கள் உள்பட அனைவருமே இந்த படத்தை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
After the super success of our many superhero films in India and all over the globe, it's time for our desi Superhero! pic.twitter.com/Cu8bg81FYx
— Sony Pictures Films India (@sonypicsfilmsin) February 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments