மீண்டும் உதவிகளை ஆரம்பித்துவிட்ட சோனுசூட்: இந்த முறை என்ன உதவி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சகட்டத்தில் இருந்தபோது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகளை செய்தவர் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே
குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர் சேர்வதற்காக இலவச பேருந்துகளை இயக்கினார் என்பதும், வெளிநாட்டில் தவித்து வந்த மாணவ மாணவிகளை இந்தியாவுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்கினார் என்பதும் அது மட்டுமின்றி ஏராளமான வேலை இழந்தவர்களுக்கு வேலையும் பண உதவியும் செய்து வந்தார் என்பதும் இதனால் அவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி கும்பிட்டு வந்தார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தனது உதவியை மீண்டும் சோனு சூட் ஆரம்பித்துள்ளார். இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதை அறிந்து உடனடியாக அந்த மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை சோனுசூட் அனுப்பி வைத்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னிடம் கேட்பதற்கு யாரும் தயங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து சோனு சூட் அவர்களுக்கு மீண்டும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
इंदौरवासियों के लिए @SonuSood ने भेजी मदद, कहा- मां अहिल्या की नगरी में सबकुछ ठीक होगा..#Coronavirus #COVID19 pic.twitter.com/PST0z7b7KT
— Zee MP-Chhattisgarh (@ZeeMPCG) April 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments