சோனுசூட் செய்த மேலும் ஒரு உதவி: நன்றி தெரிவித்த விநாயகர் பக்தர்கள்
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாக மாறியவர் சோனுசூட் என்பது இந்த கொரோனா காலத்தில் அனைவரும் புரிந்துகொண்டனர். கொரனோ காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநிலங்களை சிக்கியிருந்த நிலையில் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தன்னுடைய சொந்த செலவில் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்தார் சோனு சூட் என்பது தெரிந்ததே.
அதுமட்டுமின்றி டுவிட்டர் மூலமாக உதவிகள் கேட்கும் பலருக்கு அவர் தயங்காமல் உதவி செய்துள்ளார். மகள்களை வைத்து ஏர் பூட்டிய விவசாயிக்கு டிராக்டர், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பறி போய் விட்டதால் காய்கறி விற்பனை செய்த இளம்பெண்ணுக்கு சாப்ட்வேர் பணி, உள்பட சோனுசூட் செய்த உதவிகளின் எண்ணிக்கையை அடுக்கிக் கொண்டே போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விநாயகர் சதூர்த்தி விழாவை தங்கள் சொந்த ஊரில் கொண்டாட விரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு பேருந்துகளை சோனுசூட் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’லால்பாக் மற்றும் பிரபாதேவியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு பின்னால் வசிக்கும் சில புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கல் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட சொந்த ஊருக்கு வர வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகள் அனுமதி பெற்று அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 300 பேர்கள் ஐந்து நாட்களுக்கு முன்பே கிளம்பிவிட்டனர், மீதி பேர் வேறு விரைவில் கிளம்பவுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து விநாயகர் பக்தர்கள் சோனுசூட் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.