மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சோனுசூட்டின் மனித நேயத்தைப் பாராட்டி மகிழும் விதமாக ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம், அங்குள்ள ஒரு துறைக்கு நடிகர் சோனுசூட்டின் பெயரை வைத்து இருக்கிறது. இது தனக்கு பெருமை அளிப்பதோடு மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் நடிகர் சோனு சூட் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்தபோது, போக்குவரத்து எதுவும் இன்றி புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். அப்போது நடிகர் சோனு சூட், தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.
மேலும் விவசாயம் புரிய வசதியின்றி சொந்த மகள்களை வைத்தே நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் ஒன்றை அனுப்பி வைத்தார். செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார். நெட்வொர்க் வசதி இல்லாமல் இருந்த ஒரு மலைக் கிராமத்திற்கு சொந்தமாக ஒரு செல்போன் டவரையே உருவாக்கி கொடுத்தார். இப்படி சோனு சூட்டின் மனிதநேய செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நடிகர் சோனு சூட்டின் மனித நேயத்தை கவுரவிக்கும் வகையில் ஐ.நா சபை சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் கோல்ஸ் விருதினை வழங்கியது. அதேபோல தற்போது ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் சரத்சந்திரா கல்லூரி நிர்வாகம் இவரது பெயரை ஒரு துறைக்கே வைத்து கவுரவித்து இருக்கிறது. இதுகுறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments