நீங்கள் ஒரு ஹீரோ: தனுஷ் நாயகியை பாராட்டிய சோனுசூட்!  

தனுஷ் படத்தின் நாயகியை ’நீங்கள் ஒரு ஹீரோ’ என நடிகர் சோனுசூட் பாராட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து உதவி செய்து வருபவர் சோனு சூட் என்பது தெரிந்ததே. இப்போதும் அவர் தனது உதவியை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சோனு சூட் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்திற்கு நடிகை சாரா அலி கான் ஒரு மிகப்பெரிய தொகையை நிதி உதவியாக வழங்கி உள்ளார். தனுஷ் நடித்து வரும் பாலிவுட் திரைப்படமான ’அட்ராங்கி ரே’ என்ற திரைப் படத்தில் நாயகியான இவர் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்யும் வகையில் சோனு சூட் தொண்டு நிறுவனத்திற்கு நிதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சாரா அலி கானுக்கு சோனு சூட் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். உங்களது நன்கொடைக்கு மிகவும் நன்றி. இந்த இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற உங்களுடைய எண்ணம் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. உங்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் ஒரு ஹீரோ’ என குறிப்பிட்டுள்ளார். சோனு சூட்டின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

நடிகர் கமலின் தோல்விக்கு என்ன காரணம்? விமர்சிக்கும் வீடியோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கிய அஜித்தின் 'தக்‌ஷா' டீம்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அஜித்தின் 'தக்‌ஷா' டீம் களம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

வாக்கு எண்ணிக்கையில் ஏமாற்ற முடியுமா? சிறப்பு நேர்காணல் வீடியோ!

இந்தியாவில் வாக்குபதிவை நடத்துவதற்கு EVM இயந்திரம் பயன்படுத்தப் படுகிறது. இந்த இயந்திரத்தைக் கொண்டு பலமுறை தேர்தல்

'உள்ளயே இருங்க, அதான் ஊருக்கு நல்லது': வைரலாகும் 'சுல்தான்' படத்தின் டைமிங் வசனம்!

சமீபத்தில் வெளியான கார்த்திக் நடித்த 'சுல்தான்' படத்தில் வசனமான 'உள்ளேயே இருங்கள் அதான் ஊருக்கு நல்லது' என்ற வசனத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

ஓடிடி ரிலீஸிலும் சிக்கல்: சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் முதல் அலையின்போது திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின என்பதும் அவற்றில் சூர்யாவின் சூரரைப்போற்று,