உயிருக்குப் போராடும் தமிழ் நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்படும் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவருடைய சிகிச்சைக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி செய்வதாக உறுதியளித்து இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
தல அஜித் நடிப்பில் வெளியான “வரலாறு“, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருடா திருடி“, “மன்மதாரா“ போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தவர்தான் சிவசங்கர் மாஸ்டர். இவர் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். மேலும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா“ போன்று ஒருசில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருடைய சிகிச்சைக்கு பணம் இல்லாததால் சினிமா பிரபலங்கள் உதவுமாறும் அவருடைய மகன் அஜய் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தத் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி ரசிகர்கள் மத்தியில் கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா கால சூப்பர் ஸ்டார் நடிகர் சோனு சூட் சிவசங்கர் மாஸ்டருக்கு உதவிசெய்வதாக உறுதி அளித்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சோனு சூட்டிற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments