சோனியா அகர்வாலுக்கு திருமணமா? வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2002ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் என்ற வெற்றி திரைப்படத்திற்கு பின் விஜய் நடித்த ’மதுர’ செல்வராகவன் இயக்கிய ’7ஜி ரெயின்போ காலனி’ மற்றும் ’புதுக்கோட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சோனியா அகர்வால் நடித்த ‘திருட்டுப்பயலே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த சோனியா அகர்வால் அதன்பின் நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் விவாகரத்து செய்த 10 ஆண்டுகள் கழித்து தற்போது தனது மறுமண அறிவிப்பை அறிவித்துள்ளார்
சோனியா அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்னும் மூன்று நாட்களில் தனது திருமணம் என்றும் திருமணம் குறித்த பிற விவரங்களுக்கு காத்திருங்கள் என்றும் அறிவித்துள்ளார். மேலும் தாலி கட்டுவது போன்ற ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவையும் சோனியா அகர்வால் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து சோனியா அகர்வாலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். சோனியா அகர்வாலை திருமணம் செய்யப் போகும் நபர் யார் என்பது குறித்த தகவலை அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த டுவீட்டுக்கள் சோனியா அகர்வால் நடிக்கும் அடுத்த பட புரமோஷனாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுவதால் மூன்று நாட்கள் கழித்தே இந்த டுவீட்டின் உண்மைத்தன்மை தெரிய வரும்
Stay tuned!!! pic.twitter.com/qhp6rUa137
— Sonia aggarwal (@soniya_agg) July 22, 2020
— Sonia aggarwal (@soniya_agg) July 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout