தன்னுடைய படத்தை ரீரிலீஸ் செய்ய கோரிக்கை விடும் சோனியா அகர்வால்.. செல்வராகவன் மனது வைப்பாரா?

  • IndiaGlitz, [Wednesday,May 08 2024]

கடந்த சில மாதங்களாக ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வரும் நிலையில் தன்னுடைய படத்தையும் செய்ய வேண்டும் என சோனியா அகர்வால் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அந்த கோரிக்கையை அந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் மனது வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவான ’7ஜி ரெயின்போ காலனி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான இந்த படம் இரு மொழிகளிலும் வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இந்த படத்தின் நாயகி சோனியா அகர்வால் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தை மீண்டும் ரீரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். சோனியா அகர்வாலின் இந்த கோரிக்கையை இயக்குனர் செல்வராகவன் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை திருமணம் செய்த செல்வராகவன், அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் 'கோட்' படத்தில்  பிரபல நடிகர் கேமியோவில் நடிக்கிறாரா? உண்மைதானா?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பிரபல

அடுப்பே பற்ற வைக்காமல் சூப்பர் டிஷ் செய்த ரம்யா கிருஷ்ணன்.. வேற லெவல் வீடியோ..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுப்பே பற்றவைக்காமல் செய்த டிஷ் ஒன்றின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பீச்சில் தோழிகளுடன் நயன்தாரா? வேறு யார் யார் இருக்காங்க பாருங்க..!

நடிகை நயன்தாரா பீச்சில் தனது கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'தக்லைஃப்' படத்தின் மாஸ் போஸ்டர்.. சிம்பு ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில்

வட இந்தியாவுக்கும் பிரச்சாரம் செய்ய செல்கிறாரா கமல்ஹாசன்? அப்ப 'தக்லைஃப்' படப்பிடிப்பு?

உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் திமுக கூட்டணிக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார் என்பதும் அந்த கூட்டணியில் அவருக்கு ஒரு தொகுதி கூட