செல்வராகவனை மனவலியுடன் தான் பிரிந்தேன்: சோனியா அகர்வாலின் அதிர்ச்சி பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த நான்கு ஆண்டுகளில் விவாகரத்து செய்த நடிகை சோனியா அகர்வால் அவரை மிகுந்த மன வலியுடன் தான் பிரிந்தேன் என சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. .
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன்பின் 'புதுப்பேட்டை', 'மதுர', 'பாலக்காட்டு மாதவன்', உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் அதன் பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார். இதனை அடுத்து செல்வராகவன் தன்னிடம் உதவியாளராக இருந்த கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் சோனியா அகர்வால் இன்னும் மறுமணம் செய்யாமல் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்து சமீபத்தில் சோனியா அகர்வால் பேட்டியளித்தபோது, 'இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் என்றும் திருமணத்தின்போது இருவரும் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தோம் என்றும், ஆனால் ஒரு சில காரணங்களால் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்ட போது மிகுந்த வலியுடன் தான் பிரிந்தோம் என்றும் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments