close
Choose your channels

மீண்டும் நாயகியாக களமிறங்கும் சோனியா அகர்வால்.. டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Monday, August 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சோனியா அகர்வால் தற்போது மீண்டும் அதிரடியாக நாயகியாக களமிறங்கியுள்ளார். அவர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பின்னர் விஜய்யின் ’மதுர’ சிம்பு நடித்த ’கோவில்’ தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’7/G’ என்ற திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஹாரூன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க உள்ளார். கண்ணன் ஒளிப்பதிவில், டான் போஸ்கோ படத்தொகுப்பில் உருவாகும் என்றது படத்தை இயக்குனர் ஹரூன் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் ஸ்மிருதி வெங்கட் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment