'இங்க என்ன நடக்குதுன்னு புரியாம பேசாத.. சோனியா அகர்வாலின் '7ஜி' த்ரில்லர் டீசர்..!

  • IndiaGlitz, [Monday,April 01 2024]

நடிகை சோனியா அகர்வால் நடித்த ‘7ஜி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல பேய் திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்னொரு பேய் படமாக இந்த ‘7ஜி’ திரைப்படம் உருவாகி உள்ளது என்பது இந்த படத்தின் ஒரு நிமிட டீசரில் இருந்து தெரிய வருகிறது.

சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில், ஸ்மிருதி வெங்கட் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை ஹாரூன் என்பவர் இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையில், கண்ணா ஒளிப்பதிவில், டான் போஸ்கோ படத்தொகுப்பில் உருவாக்கியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது

ஸ்மிருதி வெங்கட் மற்றும் சோனியா அகர்வால் வாழ்க்கையில் நுழையும் ஒரு பேய், அவர்களுக்கு என்னென்ன தொல்லை கொடுக்கிறது, அந்த பேயிடம் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ஒரு நிமிட டீசர் த்ரில்லாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் சோனியா அகர்வாலுக்கு ஒரு நல்ல ரீஎண்ட்ரி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.