சோனியா அகர்வால் நடித்த 7G ரிலீஸ் தேதி அறிவிப்பு..ஹாரர் த்ரில்லர் படம்..!

  • IndiaGlitz, [Sunday,June 23 2024]

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாரூன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாரூன்.

புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம் பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்கு பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையில் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாரூன் தயாரித்ததுடன், எழுதி, இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜு V டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

More News

இன்று சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10  இறுதிப்போட்டி: டைட்டில் பட்டம் யாருக்கு?

தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 9 சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய

ஒரே படத்திற்கு 5 முறை டப்பிங் பேசிய கமல்ஹாசன்.. இப்படி ஒரு நடிகர் யாராவது உண்டா?

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரே படத்திற்கு ஐந்து முறை டப்பிங் பேசியதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து 'இப்படி ஒரு நடிகர் யாராவது உண்டா' என கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

'கோட்' படத்தை அடுத்து இன்னொரு படத்திலும் ஏஐ விஜயகாந்த்.. இன்று முதல் பணிகள் ஆரம்பம்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் வருகிறார் என்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ரேஸ் காரில் மாஸ் காட்டும் அஜித்.. வேற லெவல் வீடியோ..!

'விடாமுயற்சி'  படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித், அஜர்பைஜான் சென்று இருக்கும் நிலையில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரோ இல்லையோ, கார் ஓட்டுவதிலும் கார் ரேசில் கலந்து கொள்வதிலும்

சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. பவதாரிணி குரலில் என்ன ஒரு மெலடி.. 'கோட்' பாடல் ரிலீஸ்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.