close
Choose your channels

சோனியா அகர்வாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..!

Tuesday, April 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சோனியா அகர்வாலின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவர் சோனியா அகர்வால். இவர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை அடுத்து சிம்புவின் ’கோவில்’ விஜய்யின் ’மதுர’ தனுஷின் ’புதுப்பேட்டை’ உள்பட பல திரைப்படங்களின் நடித்தார். சமீபத்தில் வெளியான பிரபுதேவாவின் ’பாஹிரா’ என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2010 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் சோனியா அகர்வால் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் வினய், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு சோனியா அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment