13 வயதிலேயே பாலியல் கொடுமையை அனுபவித்தேன்… பகீர் தகவலை பகிர்ந்த பாலிவுட் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் ஸ்டார் கிட்ஸ் நடிகைகளுள் ஒருவரான சோனம் கபூர், தான் 13 வயதிலேயே பாலியல் கொடுமையை அனுபவித்ததாக பகிர்ந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலிவுட்டில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக வலம்வருபவர் அனில் கபூர். இவருடைய மகள் சோனம் கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகர் ரன்பீர் கபூர் நடித்த ‘சாவரியா’ திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் நடிகர் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ எனும் இந்தி சினிமாவில் நடித்திருந்தார். இதன் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக 2019 இல் ‘தி சோயா ஃபேக்டரி‘ எனும் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது ‘பிளைண்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு 13 வயதில் நடைபெற்ற பாலியல் சீண்டலை குறித்து பேசியுள்ளார்
நடிகை சோனம் கபூர் மும்பையில் உள்ள பிரபல திரையரங்கான கெய்ட்டி கேலக்ஸி திரையரங்கிற்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்ததாகவும் அப்போது இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்காகச் சென்றபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு நபர் தன்னுடைய மார்பகங்களை பிடித்துவிட்டதாகவும் இதனால் திடுகிட்டுப்போனதாகவும் அந்த நேரத்தில் கை,கால் நடுக்கத்துடன் அழ ஆரம்பித்த நிலையில் படத்தைப் பார்த்தாகவும் கூறியிருந்தார்.
மேலும் பல வருடங்களாக இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் தானே தவறு இழைத்தது போன்ற மனநிலையைக் கொண்டிருந்ததாகக் கூறிய நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைப் பருவத்தில் ஒருவித பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். தாங்களே தவறு செய்ததுபோன்ற குற்ற உணர்வுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் நடிகை சோனம் கபூர் கூறியிருந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தி ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் பல பிரபலங்களுக்கு மத்தியில் நடிகை சோனம் கபூர் பகிர்ந்து கொண்ட இந்தத் தகவல் தற்போது மீண்டும் சோஷியல் மீடியாக்களில் பரவலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் பாலியல் சீண்டலுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com