பொது இடத்தில், கணவரை ஷூ லேஸ் கட்ட வைத்த நடிகை சோனம் கபூர்! வைரலாக பரவும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொது இடத்தில் கௌரவம் பார்க்காமல், பிரபல நடிகைக்கு அவருடைய கணவர் ஷூ லேஸ் கட்டி விட்ட சம்பவம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சோனம் கபூர். திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர், லைம்லைட்டில் இருக்கும்போதே... டெல்லியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை, காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றில், சோனம் கபூர் மற்றும் அவருடைய கணவர் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சோனம் மற்றும் அவருடைய கணவர் ஆனந்த் ஆகிய இருவரும், ஒரே மாதிரியான ஷூவை அணிந்து சென்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸ் அவிழ்ந்து விட, அதனை பொது இடம் என்று கூட பார்க்காமல், தன்னுடைய மனைவிக்கு ஆனந்த் கட்டி விட்டார்.
இது அங்கு வந்திருந்தவர்களை மட்டும் இன்றி சோனம் கபூரின் ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது. தற்போது ஆனந்த் ஷூ லேஸ் கட்டி விட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com