ஜெனிவாவில் தனுஷ் பட நாயகியின் திருமணம்

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

 

பிரபல நட்சத்திரங்கள் சமீபகாலமாக வெளிநாட்டில் திருமணம் செய்வதை வழக்கமாக்கி வருகின்றனர். சமீபத்தில் விராத்கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா திருமணம், இத்தாலியில் நடைபெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சோனம்கபூரின் திருமணம் ஜெனிவாவில் வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தனது நீண்ட நாள் காதலர் ஆனந்த் என்பவரை கரம் பிடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சோனம்கபூர், பாலிவுட் நடிகர் அனில்கபூரின் மகள் ஆவார். இவர் தனுஷ் நடித்த முதல் இந்தி படமான 'ராஜண்ணா' மற்றும் சமீபத்தில் வெளியான அக்சயகுமாரின் 'பேட்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.