என் தந்தை எடுத்தது தாமதமான முடிவு: ரஜினி பட நாயகி பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' பட நாயகிகளில் ஒருவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான சோனக்சி சின்ஹாவின் தந்தையும் நடிகருமான சத்ருஹன்சின்ஹா சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய், அத்வானி காலத்தில் பாஜகவின் முக்கிய தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த சத்ருஹன்சின்ஹாவுக்கு மோடி பிரதமர் பதவியேற்றதில் இருந்து சிக்கல்கள் எழுந்தன. இதனால் பிரதமரையும் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சத்ருஹன்சின்ஹா தற்போது அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனது தந்தை காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து கருத்து தெரிவித்த சோனாக்சி சின்ஹா, 'என் தந்தை காங்கிரஸ் கட்சியில் இணைய எடுத்துள்ள முடிவு கொஞ்சம் தாமதமானதுதான். ஜெயப்பிரகாஷ் நாராயண், வாஜ்பாய், அத்வானி ஆகியோர் காலத்தில் இருந்தே என் தந்தை பாஜகவில் பணியாற்றி வருகிறார்.
கட்சியின் மீதும், தலைவர்கள் மீதும் என் தந்தை மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கட்சிக்குள்ளும் என் தந்தைக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக என் தந்தைக்கும், மூத்த தலைவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் சேர்ந்தாலும் என் தந்தை பல நல்ல செயல்கள் செய்வார். அவர் எந்தவிதமான அழுத்தத்துக்கும் ஆளாக மாட்டார் என நம்புகிறேன்''
இவ்வாறு சோனாக்சி சின்ஹா தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout