'தளபதி 62' ஹீரோயின் யார்?

  • IndiaGlitz, [Wednesday,November 01 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் மூன்றாவது வாரத்திலும் மெர்சலான வசூலை தந்து கொண்டிருக்கின்றது. விஜய்யின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக 'மெர்சல்' அமைந்துள்ள நிலையில் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கவுள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இதன்படி 'தளபதி 62' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா அல்லது தென்னிந்திய பிரபல நடிகை ராகுல் ப்ரித்திசிங் ஆகியோர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சோனாக்ஷி சின்ஹா, ராகுல் ப்ரித்திசிங் இருவரும் ஏ.ஆர்.முருகதாஸின் முந்தைய படங்களான 'அகிரா' மற்றும் 'ஸ்பைடர்' படங்களின் நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.