வெளிநாட்டு பிரபலங்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய ரஜினி பட நாயகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் குரல் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலீஃபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்டவர்கள் பதிவு செய்த டுவிட்டுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும், இந்த ட்வீட்டுக்கு இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் பதிலடி கொடுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறிய வெளிநாட்டு பிரபலங்களுக்கு ரஜினி நடித்த ’லிங்கா’ என்ற தமிழ் படத்திலும் பல பாலிவுட் படத்திலும் நடித்த சோனாக்ஷி சின்ஹா ஆதரவு கொடுக்கும் வகையில் ஒரு பதிவு செய்து உள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘இணையம் தடைசெய்யப்பட்டுள்ளது, பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். வெறுப்பு பேச்சும் அதிகரித்து வருகிறது, இதுதான் உலக அளவில் இந்த பிரச்சனை கவனிக்கப்பட காரணம். நம் நாட்டு பிரச்சனையில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதாக கருதவேண்டாம். மனிதர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் சக மனிதர்களாக அவர்களை பாருங்கள். அவர்கள் ஒன்றும் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல’ என்று கூறியுள்ளார்.
சோனாக்ஷி சின்ஹாவின் இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments