'லிங்கா'வுக்கு பின்னர் சோனாக்ஷி நடிக்கும் தமிழ் படம்

  • IndiaGlitz, [Sunday,December 18 2016]

பிரபல நடிகை காஜோல் 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை பார்த்தோம். அதேபோல் இன்னொரு பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'லிங்கா' படத்திற்கு பின்னர் மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மம்முட்டி, நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க சோனாக்ஷி சின்ஹாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த படத்தில் நடிப்பது குறித்து சோனாக்ஷி இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் நடிக்க ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாராவின் இந்த கேரக்டரில் நடிக்க அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நயன்தாராவிடமே இந்த படத்தில் நடிக்க படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அவர் பிசியாக இருப்பதால் தற்போது வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

சசிகலா முதலமைச்சராக மொட்டை அடித்த அமைச்சர்கள்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்று அவரது தலைமையின் கீழ் ஆட்சி நடந்து வரும் நிலையில் தற்போது சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என திடீரென சில குரல்கள் எழுந்துள்ளன.

கருணாநிதியை பார்க்க வந்த வைகோ கார் மீது செருப்பு வீச்சு.

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமுத்திரக்கனியின் 'தொண்டன்' படத்தில் இணைந்த பிரபல நடிகை

சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'அப்பா' படத்திற்கு பின்னர் அவர் நடித்து இயக்கும் அடுத்த படமான 'தொண்டன்' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் 61' படத்தில் இணைந்த முக்கிய தொழில்நுட்ப கலைஞர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 61' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவை பின்பற்றி பணத்தை திரும்ப பெற்ற வெனிசுலாவில் பயங்கர கலவரம்

அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் பாராளுமன்றமே ஸ்தம்பித்தது...