ரூ.18 ஆயிரத்திற்கு இரும்புத்துண்டு: ஆன்லைன் நிறுவனத்தால் அதிர்ச்சி அடைந்த ரஜினி நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ;'லிங்கா' படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான சத்ருஹன்சின்ஹாவின் மகள் ஆவார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் ஹெட்செட் ஒன்றை ரூ.18 ஆயிரம் ரூபாய்க்கு சோனாக்ஷி சின்ஹா ஆர்டர் செய்தார். அந்த நிறுவனத்திடம் இருந்து வந்த பார்சலை ஆசையுடன் பிரித்து பார்த்த சோனாக்ஷிக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
ஏனெனில் ஹெட்செட்டிற்கு பதிலாக அதில் ஒரு இரும்புத்துண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோனாக்ஷி, அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் நகுல் ஆர்டர் செய்த போனுக்கு பதிலாக தரம் குறைந்த போன் பார்சலில் வந்திருந்ததாக செய்திகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Anybody want to buy a brand new shiny piece of junk for 18,000 bucks? (Yup, its a steal) Dont worry, im selling, not @amazonIN, so ull get exactly what you’re ordering. pic.twitter.com/3W891TA7yd
— Sonakshi Sinha (@sonakshisinha) December 11, 2018
Hey @amazonIN! Look what i got instead of the @bose headphones i ordered! Properly packed and unopened box, looked legit... but only on the outside. Oh and your customer service doesnt even want to help, thats what makes it even worse. pic.twitter.com/sA1TwRNwGl
— Sonakshi Sinha (@sonakshisinha) December 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments