சோனியா அகர்வாலின் திருமண திட்டம் இதுதான்!

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

கடந்த 2002ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் அதன்பின் ’மதுர’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுக்கோட்டை’, திருட்டுப்பயலே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த சோனியா அகர்வால் அதன்பின் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் விவாகரத்து செய்த 10 ஆண்டுகள் கழித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்னும் மூன்று நாட்களில் திருமணம் என்றும் இதுகுறித்த பிற விவரங்களுக்கு காத்திருங்கள் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் தாலி கட்டுவது போன்ற ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவையும் சோனியா அகர்வால் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார்.

இதனை அடுத்து சோனியா அகர்வாலுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக புரிந்து கொண்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து சோனியா அகர்வால் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது சோனியா அகர்வாலும் அவருடைய நண்பர்களும் இணைந்து திருமணத்தை திட்டம் போட்டு செய்து தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த நிறுவனத்திற்காகத்தான் சோனியா அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார் என்பதும், அவரது திருமணம் இல்லை என்றும் தற்போது தெரிய வந்துள்ளது

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய விரும்புகிறாரா ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் திரையுலகில் வாய்ப்புகள் பெறலாம் என்றும், வாய்ப்புகள் தானாகவே கொட்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடந்த மூன்று சீசன்களில் டைட்டில் பட்டம் வென்ற

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த 'தெறி' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

அமெரிக்க காவலில் சிக்கிக் கொண்ட சீனாவின் பெண் விஞ்ஞானி!!! தொடரும் பரபரப்பு???

கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அமெரிக்கா சீனாவின் மீது குற்றம்சாட்டத் தொடங்கியதில் இருந்தே ஒட்டுமொத்த உலக நாடுகளும் இரு பிரிவாக காட்சியளிக்கின்றன

2 லட்சத்தை தாண்டியது தமிழக கொரோனா பாதிப்பு: குணமானோர் எண்ணிக்கையும் உயர்வதால் மக்கள் நிம்மதி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 5000, 6000 என அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 7000 பேர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள விஷால்! பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது