ஆபாச வீடியோக்களை தூக்கி எறிந்த பெற்றோர் மீது வழக்கு போட்ட மகன்: நீதிமன்றத்தில் அதிர்ச்சி தீர்ப்பு!
- IndiaGlitz, [Saturday,December 19 2020]
மகன் சேகரித்து வைத்திருந்த ஏராளமான ஆபாச வீடியோக்களின் டிவிடிகளை பெற்றோர்கள் தூக்கி எறிந்ததை அடுத்து பெற்றோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகன் குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவிலுள்ள டேவிட் வேர்கிங் என்ற 42 வயது நபர் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதன்பின் அவர் தனது பெற்றோருடன் வாழ்வதற்காக அவர்களுடைய வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் டேவிட் வேர்கிங் வெளியே சென்றிருந்த போது அவரது அறையை சுத்தம் செய்ய முயன்ற பெற்றோர்கள் அவர் ஏராளமாக ஆபாச டிவிடிக்களையும் செக்ஸ் பொம்மைகளை வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்தப் பொருள்கள் அனைத்தையும் வெளியே தூக்கி எறிந்தனர்
இந்த நிலையில் வெளியே சென்றிருந்த மகன் வீட்டிற்கு வந்தபோது தான் சேகரித்து வைத்திருந்த ஆபாச டிவிடிக்கள் மற்றும் செக்ஸ் பொம்மைகள் வெளியே வீசப்பட்டு இருப்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்து இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து பெற்றோர் தனக்கு 25000 டாலர்கள் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மகன் சேகரித்து வைத்திருந்த டிவிடிக்களை தூக்கி எறிந்த பெற்றோர் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது