பெற்ற தாயை கொன்ற மகன்....! துரோகத்தால் நேர்ந்த கதி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
15 வயதே நிரம்பிய மகன், தாயை கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தையே உலுக்கியுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள லால்பகுதியை சார்ந்தவர், கவரிங் பட்டறை வைத்திருக்கும் பாலமுருகன்(45). இவரது மனைவி சங்கீதா(35). இவர்களது மகன் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் அந்த ஊரில் சங்கீதாவுக்கு பலருடன் தவறான உறவு இருப்பது தெரியவந்துள்ளது. இதையறிந்த கணவர், சங்கீதாவை பலமுறை கண்டித்துள்ளார். இந்த விஷயம் மகனுக்கும் தெரியவர, அச்சிறுவன் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான். ஊர்பொதுமக்களுக்கும் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.
அதே ஊரில், இளைஞர் ஒருவருடன் தவறான பழக்கம் வைத்துக்கொண்ட சங்கீதா, அடிக்கடி அவனை தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். யாரும் இல்லாத நேரம் பார்த்து, அந்த இளைஞனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதை நேரடியாக பார்த்து சிறுவன் அம்மாவை கண்டித்துள்ளான். சங்கீதா கேட்காததால், வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்துள்ளது. இதனால் சிதம்பரத்தின் அருகில் உள்ள, கொத்தங்குடி கிராமம் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுபடியும் கணவர் வீட்டிற்கு நேற்று சங்கீதா வந்தபோது, கணவரும், மகனும் அவரை கண்டித்துள்ளனர். எவ்வளவு சொல்லியும், சங்கீதா கள்ளக்காதலை விடமாட்டேன் என்று சொன்னதால் ஆத்திரமடைந்த சிறுவன் அருகில் இருந்த கத்தியை எடுத்து, அவரை சரமாரியாக குத்தியுள்ளான். பயங்கர ரத்தவெள்ளத்துடன் உயிருக்கு போராடிய அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து சிறுவன் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தான். தன் அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை, கள்ளக்காதல் வைத்திருந்தார். கண்டித்தும் திருந்தாததால் கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சங்கீதாவின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக சிறுவனை கைது செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments