திருமணம் செய்யாத மகனால் தற்கொலைக்கு முயன்ற தந்தை... தடம் மாறுகிறதா இளையச் சமூகம்?

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

சீனாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் திருமணம் செய்துகொள்ளாத தனது மகனை நினைத்து விரக்தியில் தந்தை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சீனாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது. மேலும் இன்றைய இளையத் தலைமுறையினர் திருமணத்தை விரும்பாமல் தட்டிக்கழித்து வருவதாக அவ்வபோது குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் ஹாங்காய் ரயில் நிலையத்தில் 55 வயதான தந்தை ஒருவர் அதிக மருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். பின்னர் அந்த நபர் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படகிறது.

கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது தற்கொலைக்கு முயன்ற அந்த நபர் தனது 29 வயதான மகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது. என்னுடைய வயதில் இருக்கும் நபர்களுக்கு குழந்தைகள், பேரக்குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் எனது மகன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து சீனாவின் தேசிய ஊடகங்களில் இளைய தலைமுறையினர் ஏன் திருமணத்தை விரும்பாமல் இருக்கின்றனர் என்பது போன்ற விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. முந்தைய தலைமுறையினர் பெரும்பாலும் சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொண்டு தங்களது இல்லற வாழ்க்கையை வாழத் துவங்கிவிடுவர். ஆனால் இன்றைக்கு பொருளாதாரம் மற்றும் மாறிவரும் நவீன வாழ்க்கை முறையின் காரணமாக பல இளைஞர் திருமணம் குறித்து சிந்திக்காமலே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் 29 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத தனது மகனால் விரக்தியடைந்த தந்தை ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.