பெற்ற தாயை பேருந்து நிலையத்திலேயே விட்டு சென்ற மகன்: கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கொடுமை

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் மனிதர்களின் குணங்கள், நடவடிக்கையே மாறிவிட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் பெற்ற தாயை, கொரோனா பாதிப்பு காரணமாக பேருந்து நிலையத்திலேயே அவரது மகன் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம் மாச்சர்லா என்ற நகரின் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது தனக்கு செய்து கொண்ட கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தனக்கு கொரோனா என்பதை அறிந்தவுடன் தனது மகன் இங்கு கொண்டு வந்து விட்டு சென்று விட்டதாகவும், வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவி செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதித்த தாயாரை அவரது மகனே பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற நிகழ்வு அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More News

'கோப்ரா' பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டையும் பரிசையும் பெற்ற மாற்றுத்திறனாளி சிறுமி

ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியான உடன் அந்த பாடல்களை அச்சு அசலாக அப்படியே பாடி சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருவது கடந்தசில வருடங்களாக நடந்து வருகிறது.

கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்த விஜய் பட நடிகை!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இவர் அதன் பின்னர் விஜய் நடித்த 'வேலாயுதம்' மற்றும் 'சச்சின்' ஆகிய

தூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர்

சமந்தாவை ஸ்பைடர்மேன் லெவலுக்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!

திருமணத்திற்கு பின்னரும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகை சமந்தா, தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்

சாத்தான்குளம் கொலை வழக்கு: CBI க்கு ஏன் அத்தனை சிறப்பு??? CBI விசாரணையில் என்ன வித்தியாசம்???

சாத்தான் குளம் (ஜெயராஜ், பின்னிக்ஸ்) கொலை வழக்கு  விசாரணை தற்போது சி.பி.ஐ. க்கு மாற்றப் பட்டு இருக்கிறது