பெற்ற தாயை மதுவுக்காக கொலை செய்த மகன்

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

குடிகார மகனை தாய் கண்டிப்பதைத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மதுவுக்காக மல்லுக்கட்டி பெற்ற தாயை மகனே கொலை செய்த  அதிர்ச்சி சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கலாவதி என்பவர் தனது மகன் நீலகண்டனுடன் வாழ்ந்து வந்தார். இருவருக்குமே மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீலண்டன் குடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த மதுவை கலாவதி எடுத்து குடித்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த நீலகண்டன் தனது தாயை அடித்துள்ளார். இதனால் மதுபோதையில் இருந்த கலாவதி தடுமாறி கீழே விழுந்தார். மயங்கி விழுந்த பின்னரும் விடாமல் அடித்த நீலகண்டன் தாயின் முடியை பிடித்து சுவற்றில் மோதியுள்ளார். இதனால் மண்டை உடைந்து கலாவதி பரிதாபமாக பலியானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீலகண்டன் தப்பிக்க முயற்சித்தபோது, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீலகண்டனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஒரு பாட்டில் மதுவுக்காக பெற்ற தாயை கொலை செய்த மகனுக்கு இனிவாழ்நாள் முழுவதும் களிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐபிஎல் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளும் நடிகர்களின் விபரங்கள்

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் வெகு உற்சாகமாக உள்ளனர்.

ஸ்மித், வார்னருக்கு ஒராண்டு தடை: ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாது

சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் கையும் களவுமாக பிடிபட்டதால்

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை திருட்டு

பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. இவருடைய சகோதரர் நாகராஜ் என்பவர் சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். கிரகலட்சுமிக்கு என தனி அறை நாகராஜ் வீட்டின் எதிரே உள்ளது.

விவசாயி ஆகவே மாறிவிட்ட கார்த்தி

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி, ஒரு விவசாயி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தினகரனின் குக்கர் சின்னத்திற்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்

டிடிவி தினகரன், சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்தார்