வெளியூரில் மாட்டிக்கொண்ட மகன்: தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூரில் மகன் மாட்டிக்கொண்டதால், மரணமடைந்த தந்தைக்கு அவரது மகளே இறுதிச் சடங்கு செய்த சோகமான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் வெகுதூரத்தில் இருந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி என்ற பகுதியை சேர்ந்த 60 வயது அசோக் சவுகான் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். ஆனால் அவரது மகன் வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்றால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரால் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை செய்ய வீடு திரும்ப முடியவில்லை

இந்த நிலையில் அசோக் சவுகன் இறுதிச்சடங்கை அவரது மகளே செய்ய முன்வந்தார். உறவினர்கள் கூட தெரிவிக்க முடியாமல் மருத்துவமனையில் இருந்து நேராக இடுகாட்டுக்கு அசோக் சவுகானின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், இடுகாட்டில் ஒரு மகன் செய்ய வேண்டிய ஈமச்சடங்கை அவரது மகள் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமணங்கள், இறுதிச்சடங்குகள் உட்பட பல நிகழ்வுகள் இதுபோன்று அசாதாரணமாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

கொரோனா குறைவான எண்ணிக்கையில் தப்பித்துக்கொண்ட நாடுகள்???  எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!!

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலகச்சுகாதார நிறுவனத்தால் உலகச்சுகாதார நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா

கொரோனா இருப்பதாக வதந்தி: தற்கொலை செய்து கொண்ட மதுரை வாலிபர் 

தனக்குக் கொரோனா பாதிப்பு இருப்பதாக தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரப்பியதால் விரக்தி அடைந்த மதுரை இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட செய்தி

ஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என

அமெரிக்காவில் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்!!! எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!!!

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தற்போது அமெர