சூர்யா பிறந்த நாளில் ஒரு ஆச்சரியம்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்த் திரையுலகின் மாஸ் நடிகர்களின் பிறந்தநாளின்போது சமூகவலைதளத்தில் காமன் டிபி போஸ்டர்களை பிரபலங்கள் வெளியிடுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக உள்ளது. கடந்த மாதம் தளபதி விஜய்யின் பிறந்த நாளில் கூட ஒரே நாளில் பல திரையுலக பிரபலங்கள் காமன் டிபி போஸ்டர்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இம்மாதம் 23 ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து, இன்று திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சூர்யாவின் காமடி டிபி போஸ்டர்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு இசை அமைத்தவரும் பிரபல நடிகருமான ஜிவி பிரகாஷ், தனது சமூக வலைத்தளத்தில் ’சூர்யாவின் பிறந்த நாளன்று சூரரைப்போற்று படம் குறித்த ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே என்று சூரரைப்போற்று படத்தின் மிகப் பெரிய அப்டேட் மிக விரைவில் வெளி வரும் என்பதால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Something special from team #SooraraiPottru is on the way for Suriya sirs bday .... details in the coming days ... #update
— G.V.Prakash Kumar (@gvprakash) July 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments