இது நிச்சயம் கொலை தான்: 11 பேர் தற்கொலை குடும்பத்தில் உயிரோடு இருக்கும் ஒரே பெண் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் நேற்று முன் தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்கொலை செய்து கொண்டால் மோட்சம் பெறலாம் என்ற மூட நம்பிக்கையில் குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் 11 பேர்களில் 6 பேர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளதாகவும், இந்த அறிக்கையில் ஆறுபேர்களும் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து முழுமையாக ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு நபர் தற்போது உயிரோடு உள்ளார். தற்கொலை செய்து கொண்ட 77 வயது நிர்மலா என்பவரின் மகள் சுஜாதா தான் அவர். வேலை விஷயமாக பல மாதங்கள் வெளியூரில் இருந்த சுஜாதா, தனது குடும்பமே தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியபோது, ''என்னுடைய குடும்பம் தற்கொலை செய்ய கூடியது அல்ல. எங்கள் வீட்டில் யாருக்கும் அவ்வளவு மோசமான மூட நம்பிக்கை இல்லை. இவர்களை யாரும் ஏமாற்றவில்லை. ஆனால் யாரோ இவர்களை கொலை செய்து இருக்கிறார்கள். போலீஸ் அவர்களை கைது செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments