இப்படியொரு திறமையா? ஒரு வார்த்தையால் வேலையை தக்கவைத்த கில்லாடி நபர்!

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நம்மில் பலபேர் எப்படியாவது அந்த வேலையை வாங்கிவிட வேண்டும் என விரும்புவோம். அதற்காக மெனக்கெட்டு பயோடேட்டாவையும் தயார் செய்வோம். ஆனால் இங்கொரு நபர் Googling எனும் ஒரு வார்த்தையை தன்னுடைய தனித்திறமையாக பயோடேட்டாவில் போட்டு நேர்காணல் செய்பவர்களையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

வெளிநாட்டில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கேட்டு இளைஞர் ஒருவர் விண்ணப்பித்து இருக்கிறார். அந்த வேலைக்காக ஆயிரக்கணக்கில் பயோடேட்டாக்களும் குவிந்து இருக்கிறது. இதற்கு நடுவில் ஒரு பயோடேட்டாவை பார்த்த நிறுவன அதிகாரிகள் வியந்துபோய் அந்த நபரை உடனே நேரில் வரவழைத்து நேர்காணல் நடத்தி இருக்கின்றனர்.

அத்தனை சிறப்புகொண்ட பயோடேட்டாதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு தரவை எப்படி கூகுள் செய்து தேட வேண்டும் என்று தெரிந்து இருக்கும். இந்த விஷயத்தையே அந்த நபர் தனது தனித்திறமையாக கூறி இருக்கிறார். இதனால் அதிகாரிகளும் வியந்துள்ளனர். மேலும் அந்த இளைஞருக்கும் தனி மதிப்பு கிடைத்து இருக்கிறது.

இதை Cat McGee எனும் சாப்ட்வேர் டெவலெப்பர் தற்போது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு நெட்டிசன்கள் இளைஞர் குறிப்பிட்ட Googling திறமையை கொண்டாடி வருகின்றனர். கூடவே லைக்குகளும் குவிந்துவருகிறது