'கோபேக் சைனா வைரஸ்': தீப்பந்தம் ஏந்தி திடீரென கோஷம் போட்டதால் பரபரப்பு
- IndiaGlitz, [Monday,April 06 2020]
கொரோனா வைரசுக்கு எதிராக இந்திய அரசு கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் அரசுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கூறினார். அதிலும் சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள், மற்றும் டார்ச்லைட் மட்டும் அடிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவாக கூறியிருந்தார்
இருப்பினும் ஒருசில ஆர்வக் கோளாறுகள் பிரதமர் கூறியதை அரைகுறையாக புரிந்து கொண்டு நேற்று இரவு 9 மணிக்கு தீப்பந்தங்களை ஏந்தி தெருவில் ஊர்வலம் போல் வர ஆரம்பித்துவிட்டனர். சமூக விலகலையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர்கள் கூட்டமாக கூடி ’கோபேக் சைனா வைரஸ்’ போன்ற கோஷங்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஒரு நல்ல நோக்கத்திற்காக பிரதமர் கூறியதை தவறாக புரிந்து கொண்டு தீப்பந்தம் ஏற்றிய இவர்களுக்கு உண்மையில் மூளை இருக்கிறதா அல்லது மூளைக்கு பதில் வேறு ஏதும் இருக்கிறதா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒருசிலர் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு சாலைகளில் ஓடிச்சென்று ஏதோ திருவிழாவை கொண்டாடுவதுபோல் கொண்டாடியதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற அரைகுறை ஆசாமிகளால் கொரோனா வைரஸ் மேலும் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்
Go back Go back China Virus Go back says BJP MLA
— krishanKTRS (@krishanKTRS) April 5, 2020
Im sure it has heard us and is planning to leave tomorrow morning !
#coronavirus #9pm9mins #COVID2019 pic.twitter.com/mhyunVO43b
#9MinutesForIndia Modi will be your teacher for ever pic.twitter.com/QQRDMlby7p
— Boobalan (@Boobalan2015) April 5, 2020