'விடுதலை 2' படத்தில் இணையும் புதிய கேரக்டர்கள்.. இன்னும் தாமதமாக வாய்ப்பு?

  • IndiaGlitz, [Monday,November 27 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் இருப்பதாகவும் அதனால் ரிலீஸ் தேதி இன்னும் கால தாமதமாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் சில புதிய நடிகர்கள் இணைந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் இணைந்து உள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் காட்சிகளுக்கான டிஏஜிங் டெக்னாலஜி பணி நடைபெற்று வருவதாகவும் இன்னும் மஞ்சு வாரியர் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’விடுதலை 2’ படம் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டாலும் இந்த படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் இணைந்துள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.