முன்னணி நடிகர்களின் படங்களை மொத்தமாக அள்ளிய நெட்பிளிக்ஸ் .. இன்னும் என்னென்ன படங்கள் பாருங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அஜித்தின் ’ஏகே 62’ ராகவா லாரன்ஸின் ’சந்திரமுகி 2’ உள்பட 8 படங்களின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளன என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் சில படங்களின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் அப்டேட் முடியவில்லை என்றும், மிகப்பெரிய அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வர இருப்பதாகவும் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் அஜித்தின் 'ஏகே 62’ ராகவா லாரன்ஸின் ’சந்திரமுகி 2’ உதயநிதி ஸ்டாலினின் ’மாமன்னன்’ கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’ கார்த்தியின் ‘ஜப்பான்’ விக்ரம் பிரபுவின் ’இறுகப்பற்று’, ஜெயம் ரவியின் ’இறைவன்’ விஷ்ணு விஷாலின் ’ஆரியன்’ ஆகிய எட்டு படங்களின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி ஜீவாவின் ’வரலாறு முக்கியம்’ விக்ரமின் ’தங்கலான்’, தனுஷின் ’வாத்தி’ சமுத்திரக்கனியின் ’தலைகூத்து’ கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களின் டிஜிட்டல் உரிமையையும் பெற்றுள்ளது.
மேலும் லைகா தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் அருள்நிதி நடிக்கும் படம், லைகா தயாரிப்பில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், மேலும் லைகா தயாரிப்பில் விதார்த் மற்றும் யோகி பாபு நடிக்கும் படம், வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஆகிய படங்களின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி அப்டேட் இன்னும் முடியவில்லை, இன்னும் சில நிமிடங்களில் ஒரு மிகப்பெரிய படத்தின் தகவலையும் கூற இருக்கிறோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த படம் என்ன என்பதை யூகித்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments