சில உணவுகளும் மனிதர்களை வயதானவர்களாக மாற்றும்
Send us your feedback to audioarticles@vaarta.com
மரபியல் காரணிகள்தான் மனிதர்களை வயதானவர்களாக மாற்றுகிறது என அறிவியல் குறிப்பிடுகிறது. ஆனால் மனிதர்களது வயதையும் தோற்றத்தையும் அதிகமாக்குவதில் உணவுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன எனத் தற்போது தெரிய வந்துள்ளது.
இயற்கைக்கு மாறாகச் சிலர் இளம் வயதினைத் தாண்டும் போதே, வயதான தோற்றத்தினை அடைந்துவிடுகின்றனர். வயதான தோற்றத்தோடு தோல் சுருக்கப் பிரச்சினைகளையும் இளையத் தலைமுறை சந்தித்து வருகிறது. சில உணவு பழக்க முறைகள்தான் இவ்வாறு மனிதர்களை வயதானவர்களாக மாற்றி விடுகிறது எனத் தற்போது ஒரு ஆய்வு வலியுறுத்துகிறது.
இளம் வயதிலேயே வயதான தோற்றத்தைத் தவிர்ப்பதற்கு சில உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியமானதாகும். இந்த உணவுக் கட்டுப்பாடுகள் முன்கூட்டியே வயதாகும் நிலைமையைக் கட்டுக்குள் வைக்க உதவும் எனவும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
புகைப்பிடிக்கும் பழக்கம் மிக வேகமாக மனிதர்களை வயதானவர்களாக மாற்றிவிடுகின்றது. அதிகபடியான சூரிய ஒளி, முறையில்லாத நேர உணவுப்பழக்கம் போன்றவையும் வயதான தோற்றத்திற்குக் காரணமாகின்றன.
துரித உணவுகள்- மொறு மொறுப்பாகத் தயாரிக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதனால் டிரான்ஸ் கொழுப்புகள் (உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பு) உருவாகின்றன. வணிக ரீதியாகத் தயாரிக்கப்படுகின்ற நொறுக்குத் தீனிகளில் இந்த வகையான கொழுப்புகள் அதிகளவில் இருப்பதால் துரித உணவுகளான மொறு மொறு பண்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
புத்துணர்ச்சி தரும் விதமாகத் தற்போது பயன்படுத்தும் பானங்களில் சர்க்கரை, காஃபின், சோடியம் மற்றும் அமிலங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. மேலும் பானங்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான வேதியல் பொருட்களும் அதில் கலக்கப்படுகின்ற நிலையில் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்றவை வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. வேகவைத்துப் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், சாக்லேட் மற்றும் சோடாக்களும் வயதான தோற்றத்தினை ஏற்படுத்துவதில் முதற்காரணியாக அமைகின்றன.
மக்காச்சோள மாவு அல்லது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவுடன் சேர்த்து செய்யப்பட்ட ரொட்டி மற்றும் பாஸ்தா வகைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை. மேலும் இம்முறையில் தயாரிக்கும்பொழுது நீரழிவு நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
ஆல்ஹகால் பானங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு உயிரணு புதுப்பித்தலைத் தவிர்த்து விடுகிறது. எனவே அதிமுக்கியமாகத் தவிர்க்கப் படவேண்டிய வரிசையில் முதலில் இருப்பது ஆல்ஹகால். இறைச்சிகளைப் பதப்படுத்துவதற்கு நைட்ரேட்டுகளைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பாக்கெட் உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உணவுப் பழக்கம்தான் உடலில் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் என்பதால் கூடிய வரையிலும் மேற்கண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இளமையான தோற்றத்திற்காக மட்டுமல்லாமல் நோயில்லாத வாழ்வினை வாழவும் முறையான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com