9 மணி விளக்கேற்றும் நிகழ்வு: ஆர்வக்கோளாறால் ஏற்பட்ட அசம்பாவிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு கொரோனாவுக்கு எதிரான போரில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிப்பதற்காக வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்தி, டார்ச்லைட் ஆகியவற்றை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்
பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் அனைவரும் நேற்று இரவு சரியாக 9 மணி முதல் 9.09 வரை மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால் நாடு முழுவதும் அரசுக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதியானது
ஆனால் ஒருசிலர் ஆர்வக்கோளாறில் செய்த செயல்களால் ஓரிரண்டு அசம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற இடத்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பட்டாசு வெடித்ததை அடுத்து அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் அந்த வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த வீட்டிலுள்ள யாருக்கும் எந்த சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னை எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் ஒரு சிலர் ராக்கெட்டுகளை வெடித்தனர். இந்த ராக்கெட்டுகள் அங்கிருந்த குப்பைகள் மற்றும் காய்ந்த இலைச்சறுகுகள் மீது விழுந்ததால் தீவிபத்து ஏற்பட்டு அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
நேற்றிரவு ஒருசிலரின் ஆர்வக்கோளாறால் ஒருசில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவும் நேற்று தங்களுடைய ஒற்றுமையை நிரூபிக்க அகல் விளக்கேற்றி பிரதமரின் வேண்டுகோளை சிறப்பாக நடத்தி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Massive fire in a building jaipur by bursting crackers for #9baje9mintues.
— DaaruBaaz Mehta (@DaaruBaazMehta) April 5, 2020
pic.twitter.com/HUSdKTItgN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments